Advertisement

ஐபிஎல் 2023: புதிய மைல் கல்லை எட்டிய மொஹித் சர்மா!

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா.

Bharathi Kannan
By Bharathi Kannan May 02, 2023 • 22:45 PM
Mohit Sharma has completed 100 wickets in IPL!
Mohit Sharma has completed 100 wickets in IPL! (Image Source: Google)
Advertisement

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. டெல்லி அணிக்கு இன்னிங்ஸின் தொடக்கமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரரான சால்ட், ஷமி வீசிய போட்டியின் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

இரண்டாவது ஓவரில் எதிர்பாராத விதமாக கேப்டன் வார்னர் ரன் அவுட்டானார். அவரை தொடர்ந்து வந்த ரோஸோ 8 ரன்களிலும், மணீஷ் பாண்டே ஒரு ரன்னிலும், பிரியம் கார்க் 10 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால், 23 ரன்களை சேர்ப்பதற்குள் டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த சரிவிலிருந்து டெல்லி அணியால் இறுதிவரை மீளவே முடியவில்லை.

Trending


இருப்பினும் 6வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த டெல்லி துணை கேப்டன் அக்‌ஷர் படேல் மற்றும் அமன் கான் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி சரிவில் இருந்து மீட்டனர். நிதானமாக விளையாடிய இந்த கூட்டணி 55 பந்துகளில் 50 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து, 27 ரன்கள் சேர்த்து இருந்தபோது அக்‌ஷர் படேல் ஆட்டமிழந்தார். அதேநேரம் பொறுப்புடன் விளையாடிய அமன் கான், 41 பந்துகளில் அரைசதம் எட்டினார். தொடர்ந்து 51 ரன்கள் சேர்த்து இருந்தபோது அவர் ஆட்டமிழந்தார்.

இதனால், 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை சேர்த்தது. குஜராத் சார்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி, 4 ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேபோல் மோஹித் சர்மா 4 ஓவர்களில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 

இந்நிலையில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான மோஹித் சர்மா இதுவரை 92 போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். ஐபிஎல் தொடரில் இவரது சிறந்த பந்து வீச்சு 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தியது தான். அதேபோல் இவரின் அறிமுக தொடரான 2013ஆம் ஆண்டில் மட்டும் 20 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement