சதத்தை அடித்ததை விட அணி வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது - பென் ஸ்டோக்ஸ்!
சதத்தை அடித்ததை விட அணி வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுக்கு இது மிக கடினமான உலகக் கோப்பையாக அமைந்திருக்கிறது என பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 40வது லீக் ஆட்டம் புனேவில் இன்று நடைபெற்றுது. இதில் இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 339 ரன்களை குவித்தது. பென் ஸ்டோக்ஸ் சதமடித்து அசத்தினார். அவர் 84 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டேவிட் மலான் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 87 ரன்னில் வெளியேறினார். கிறிஸ் வோக்ஸ் அரை சதம் கடந்தார்.
இதையடுத்து, 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. இங்கிலாந்து அணியினர் துல்லியமாக பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. ஸ்காட் எட்வர்ட்ஸ் 38 ரன்னும், வெஸ்லி பரேசி 37 ரன்னும், சைப்ரண்ட் 33 ரன்னும் எடுத்தனர். தேஜா 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், நெதர்லாந்து 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 160 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து ஆறுதல் வெற்றி பெற்றது. இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித், மொயின் அலி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Trending
மேலும் இப்போட்டியில் சதமடித்து அசத்திய பென் ஸ்டோக்ஸுக்கு ஆட்டநாகன் விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய அவர், “சதத்தை அடித்ததை விட அணி வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுக்கு இது மிக கடினமான உலகக் கோப்பையாக அமைந்திருக்கிறது. இந்த போட்டியில் இந்த ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருந்தது. சில டென்னிஸ் பால் பவுன்சர்களும் வந்தது. வோக்ஸ் உடன் இணைந்து ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினேன்.
அழுத்தம் அதிகரிக்கும் போதெல்லாம் ஸ்கோர் போர்டை பார்த்து இன்னும் நேரம் இருக்கிறது என்று நினைவுப்படுத்திக் கொண்டேன். போட்டியை ஆழமாக எடுத்துச் சென்று இறுதியில் ரன்கள் அதிரடியாக எடுத்துக் கொண்டோம். வோக்ஸ் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக எங்களுக்கு மிகச் சிறந்த ஆல் ரவுண்டராக இருந்து வருகிறார். இன்றும் அவர் இதை நிரூபித்து இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now