Eng vs ned
இந்த வெற்றி ஓரளவுக்கு ஆறுதலை தந்துள்ளது - ஜோஸ் பட்லர்!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று புனே நகரில் நடைபெற்ற போட்டியில் ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணி சார்பாக பென் ஸ்டோக்ஸ் 108 ரன்கள் குவித்து அசத்தினார்.
இதனைத்தொடர்ந்து 340 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நெதர்லாந்து அணியானது இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 37.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 179 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றி பதிவு செய்தது.
Related Cricket News on Eng vs ned
-
நாங்கள் சில தருணங்களில் நன்றாக செயல்பட்டோம் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
இப்போட்டியில் ஆரம்பத்திலேயே நாங்கள் பந்து வீச்சில் சிறப்பாக துவங்காமல் இங்கிலாந்தை நழுவ விட்டு விட்டோம் என நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்கார்ட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
சதத்தை அடித்ததை விட அணி வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது - பென் ஸ்டோக்ஸ்!
சதத்தை அடித்ததை விட அணி வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுக்கு இது மிக கடினமான உலகக் கோப்பையாக அமைந்திருக்கிறது என பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து!
நெதர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: பென் ஸ்டோக்ஸ் அசத்தல் சதம்; 339 ரன்களை குவித்தது இங்கிலாந்து!
நெதர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 340 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து vs நெதர்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 40ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24