Advertisement

ஐபிஎல் 2023: மோசமான சாதனைப்பட்டியளில் இடம்பிடித்த யாஷ் தயாள்!

ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர் என்ற பட்டியளில் யாஷ் தயாள் இடம்பிடித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 10, 2023 • 10:59 AM
Most Expensive Bowler IPL: Yash Dayal concedes 69 runs for 2nd WORST bowling figures in GT vs KKR!
Most Expensive Bowler IPL: Yash Dayal concedes 69 runs for 2nd WORST bowling figures in GT vs KKR! (Image Source: Google)
Advertisement

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13ஆவது லீக் போட்டியானது நேற்று மதியம் அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியானது தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 204 ரன்களை குவித்தது.

பின்னர் 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. கொல்கத்தா அணி சார்பாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் நிதீஷ் ராணா ஆகியோர் சிறப்பாக விளையாடிய வேளையில் இறுதி கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் கொல்கத்தாவின் தோல்வி உறுதியானது.

Trending


அந்த நேரத்தில் கடைசி ஓவரின் போது 6 பந்துகளுக்கு 29 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு இருந்தது. இதன் காரணமாக நிச்சயம் கொல்கத்தா அணி தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கடைசி ஓவரின் 5 பந்துகளை தொடர்ச்சியாக சிக்ஸருக்கு விளாசிய கொல்கத்தா அணியின் இளம் வீரரான ரிங்கு சிங் அபாரமான வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

அவரது இந்த ஆட்டம் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. அதேவேளையில் அவருக்கு எதிராக அந்த கடைசி ஓவரை வீசிய குஜராத் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாள் களத்தில் கண்ணீர் விட்டதோடு சேர்த்து சில மோசமான சாதனைகளுக்கும் சொந்தக்காரராக மாறியுள்ளார்.

அந்த வகையில் ஐபிஎல் தொடரின் ஒரே போட்டியில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த வீரர் என்ற வரிசையில் சன்ரைசர்ஸ் அணியின் வீரர் பாசில் தம்பி முதலிடத்தில் இருக்கிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் அவர் ஒரே போட்டியில் 70 ரன்கள் விட்டுக் கொடுத்து இருந்ததார். அவரை தொடர்ந்து தற்போது நடப்பு ஐபிஎல் வரலாற்றின் மிக மோசமான பவுலர் என்ற பட்டியலில் இரண்டாவது இடத்தில் யாஷ் தயாள் உள்ளார்.

நேற்றைய போட்டியில் அவர் கடைசி ஓவரில் கொடுத்த 31 ரன்களோடு சேர்த்து நான்கு ஓவர்களில் 69 ரன்களை வழங்கி உள்ளார். அதேபோன்று இறுதி ஓவரில் ஐந்து சிக்ஸர்களை வழங்கிய பந்துவீச்சாளர் என்ற பட்டியலிலும் அவர் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement