
MS Dhoni completed 6000 runs as Captain in T20 yesterday (Image Source: Google)
டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி 8 பந்தில் 21 ரன் எடுத்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் கேப்டனாக 6 ஆயிரம் ரன்களைக் கடந்தார்.
இதன்மூலம் விராட் கோலிக்கு அடுத்தபடியாக கேப்டனாக 6ஆயிரம் ரன்களைக் கடந்த இரண்டாவது வீரர் எனும் சாதனையை மகேந்திர சிங் தோனி படைத்துள்ளார். இப்பட்டியலில் விராட் கோலி 6,451 ரன்களுடன் முதலிடத்திலும், ரோஹித் சர்மா 4764 ரன்னுடன் 3ஆவது இடத்தில் உள்ளார்.
மேலும் 20 ஓவர் போட்டிகளில் 200 கேட்ச் பிடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் தோனி படைத்தார். ஷர்துல் தாகூரின் கேட்சை பிடித்ததன் மூலம் இந்த மைல்கல்லை தொட்டார். இப்பட்டியலில் தினேஷ் கார்த்திக் 182 கேட்ச்களுடன் 2ஆவது இடத்தில் உள்ளார்.