ஐபிஎல் 2025: ஓய்வு முடிவு குறித்து மனம் திறந்த எம் எஸ் தோனி!
ஐபிஎல் தொடர் முடிந்த, பின்னர் என் உடல் இந்த வகையான அழுத்தத்தைத் தாங்க முடியுமா என்று பார்க்க அடுத்த 6-8 மாதங்கள் நான் உழைக்க வேண்டும் என்று சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணியில் அதிகபட்சமாக கேப்டன் அஜிங்கியா ரஹானே 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 48 ரன்களையும், ஆண்ட்ரே ரஸல் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 38 ரன்களையும், மனீஷ் பாண்டே 36 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை மட்டுமே சேர்த்தது. சிஎஸ்கே தரப்பில் நூர் அஹ்மத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில் டெவால்ட் பிரீவிஸ் 52 ரன்களையும், ஷிவம் தூபே 45 ரன்களையும் சேர்த்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். இறுதியில் எம் எஸ் தோனி 17 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில் இப்போட்டி முடிந்து பிறகு ஓய்வு முடிவு பற்றி எழுப்பட்ட கேள்வி குறித்து பேசிய சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி, “எனக்கு எல்லா இட்ங்களில் இருந்தும் ரசிகர்களின் இந்த அன்பும் ஆதரவும் கிடைக்கிறது. இது எனக்கு மறக்க முடியா நினைவுகளை உதவுகிறது. எனக்கு இபோது 43 வயதாகிறது. நான் நிறைய கிரிக்கெட் விளையாடிவிட்டேன். மேலும் அவர்களுக்கு எது என்னுடைய கடைசி சீசன் என ரசிகர்களுக்கு தெரியாது. அதனால்தான் அவர்கள் இந்தளவில் வந்து ஆதரவு தெரிவிக்கிறார்கள் என நினைக்கிறேன்.
MS Dhoni hasn't made a decision about his future yet! pic.twitter.com/moV0hzOMUf
— CRICKETNMORE (@cricketnmore) May 7, 2025நான் வருடத்திற்கு 2 மாதங்கள் மட்டுமே விளையாடுகிறேன் என்பது உண்மை. ஐபிஎல் தொடர் முடிந்த, பின்னர் என் உடல் இந்த வகையான அழுத்தத்தைத் தாங்க முடியுமா என்று பார்க்க அடுத்த 6-8 மாதங்கள் நான் உழைக்க வேண்டும். ஓய்வை பற்றி இப்போது எந்த முடிவையும் நான் எடுக்கவில்லை. ஆனாலும் ரசிகர்கள் கொடுக்கும் அன்பும் ஆதரவும் அற்புதமானதாக உள்ளது. அதற்காக மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: LIVE Cricket Score
முன்னதாக நடப்பு ஐபிஎல் தொடருடன் எம் எஸ் தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்ற யூகங்கள் அதிகரித்து வருகின்றன. ஐபிஎல் தொடரில் இதுவரை 276 போட்டிகளில் விளையாடி 24 அரைசதங்களுடன் 5423 ரன்களைச் சேர்த்துள்ளார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 5 முறை ஐபிஎல் கோப்பையையும், இரண்டு சாம்பியன்ஸ் லீக் கோப்பையையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now