ரிசர்வ் டேவால் தோனி ரசிகர்கள் அதிர்ச்சி; 2019 நினைவில் வந்து போவதே காரணம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் இறுதிப்போட்டி மழை காரணமாக ரிசர்வ் டேவுக்கு மற்றப்பட்டுள்ளது சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் சாம்பியன் பட்டத்தை வெளியேற போவது யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் இன்னும் 24 மணி நேரம் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சிஎஸ்கேவும் குஜராத்தும் மோத இருந்தது. ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பையும் தண்ணீர் ஊற்றி கெடுத்தது கோடை மழை.
இதனால் நேற்று நடைபெற இருந்த போட்டி இன்று இரவு மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ரிசர்வ் டேக்கும் தோனிக்கும் ஆகவே ஆகாது என்பதால் ரசிகர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். ஏனெனில் கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரை இறுதி போட்டி நம் அனைவருக்கும் நினைவிருக்கும். இதில் நியூசிலாந்து இந்திய அணிகள் மோதிய ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்டதால் போட்டி ரிசர்வ் டே அன்று நடத்தப்பட்டது.
Trending
இதில் தோனி முக்கியமான கட்டத்தில் ரன் அவுட் ஆக இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனதிலும் ஆறாத வடுவாக மாறிவிட்டது. மேலும் தோனி கடைசியாக விளையாடிய சர்வதேச கிரிக்கெட் போட்டியும் அதுவாக தான் அமைந்தது. இந்த நிலையில் மீண்டும் ஐபிஎல் இறுதிப் போட்டி ரிசர்வ் டே அன்று நடைபெறுகிறது.
#IPL2023Final #MSDhoni #ChennaiSuperKings #GT #Ahmedabad pic.twitter.com/OnMoPsRZSC
— CRICKETNMORE (@cricketnmore) May 28, 2023
இதனால் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே தோல்வி தழுவ நேரிடும் என ரசிகர்கள் ஏமாற்றத்துடன் உள்ளனர். மேலும் இதேபோல்தான் ரிசர்வ் டேவில் நடைபெற்ற போட்டியுடன் தோனி ஓய்வு பெற்றதால் தற்போது மீண்டும் ஐபிஎலும் அதே மாதிரி நடப்பதால் தோனி இந்த ஆட்டத்துடன் ஓய்வு பெற்று விடுவார் என ரசிகர்கள் கவலையில் உள்ளனர். அதேசமயம் தற்போது இன்று இரவும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now