
மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் முந்தைய தோல்விக்கும் மும்பை இந்தியன்ஸ் பதிலடி கொடுத்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி, “இந்த போட்டியில் நாங்களில் பேட்டிங்கில் சராசரிக்கும் குறைந்த ரன்களையே சேர்த்திருந்தோம். மேலும் இந்த மைதானத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் நிச்சயம் பனிப்பொழிவு வரும் என்பது தெரியும். மேற்கொண்டு உலகின் மிகச்சிறந்த டெத் பந்துவீச்சாளர் பும்ரா இருக்கிறார் என்பதும் தெரியும். மேலும் இன்று அவர் தனது டெத் பந்துவீச்சை சீக்கிரமாகவே தொடங்கினார்.
நாங்கள் அதைப் பயன்படுத்திக் கொண்டு அதிரடியான ஆட்டத்தை சற்று சீக்கிரமாகவே தொடங்கியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் நாங்கள் விரைவாக ரன்களைச் சேர்க்க தவறிவிட்டோம். எங்களிடம் சில கேள்விக்குறிகள் உள்ளன. அதனால் நாங்கள் அதனை சரிசெய்ய முயற்சி செய்துவருகிறோம். இனி இத்தொடரின் அனைத்து போட்டிகளிலும் நாங்கள் வெல்ல வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். ஒருவேளை தோல்வியடைந்தாலும் அடுத்த சீசனுக்கான அணியை உருவாக்க முயற்சிப்போம்.