
இந்தியா அணியின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரரும், முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுமானவர் மகேந்திர சிங் தோனி. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2020ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்த தோனி, தற்போதுவரை ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறார். மேற்கொண்டு கடந்த ஆண்டே அவர் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தாண்டு அன்கேப்ட் வீரராக சிஎஸ்கே அணி அவரை ஒப்பந்தம் செய்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவித்திருந்தாலும் தற்போதுவரை சமூக வலைதங்களில் இன்று வரை அவர் மிகவும் பிரபலமாக உள்ளார். ஆனால் அவர் சமூக வலைதளங்களில் பெரிதளவில் ஆர்வம் காட்டம் இருந்து வருவதன் மூலம் மற்ற வீரர்களைக் காட்டிலும் தனித்துவமாக இருந்து வருகிறார். இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக தோனி குறித்து அவ்வபோது வெளிவரும் தகவல்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த மகேந்திர சிங் தோனியிடம், சமூக ஊடகங்களில் இவ்வளவு குறைந்த சுயவிவரத்தை எவ்வாறு பராமரிக்கிறார் என்ற கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த தோனி, தனது விளையாட்டு நன்றாக இருந்தால், தன்னை பொது மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்த தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.