
இந்திய அணியில் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ரிஷப் ஆகியோருடன் தோனி தனிப்பட்ட முறையிலும் மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறார். பொதுவாக தோனி எந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலும் சாந்தமாக கலந்து கொண்டு வெளியே வந்து விடுவார். அப்படியான தோனியை மட்டுமே நாம் இத்தனை வருடங்கள் கண்டு வந்தோம். பெரிதளவில் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் ஆரவாரமும் செய்யும் ஆள் இல்லை.
கிரிக்கெட் மைத்தனங்களிலும் அமைதியான ஆளாகவே இருந்திருக்கிறார். பலமுறை கோப்பைகளை பெற்றிருந்தாலும், அதை இளம் வீரர்களின் கையில் கொடுத்துவிட்டு ஓரமாக நின்றுவிடக்கூடிய தோனியை மட்டுமே நாம் அறிந்திருப்போம். அண்மையில், துபாயில் நடந்த பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தோனி, இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், க்ருனால் பாண்டியா மற்றும் சிலருடன் சேர்ந்து நடனமாடி இருக்கிறார்.
MS Dhoni and Hardik Pandya enjoying a party in Dubai. pic.twitter.com/J9qOJKw4zE
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 28, 2022