தோனி தனது பேட்டிங்கை தியாகம் செய்துள்ளார் - கௌதம் கம்பீர் பாராட்டு!
இந்திய அணி கோப்பை வெல்ல வேண்டும் என்பதற்காக கடைசி வரிசையில் களமிறங்கி மகேந்திர சிங் தோனி தியாகம் செய்துள்ளதாக முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின்னரும் சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனியின் புகழும், மார்க்கெட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. விவசாயம், கிரிக்கெட் அகாடமி, சினிமா தயாரிப்பு, ஏற்றுமதி, விளையாட்டு என்று ஏராளமான முதலீடுகளை தோனி மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் தோனி தன்னுடன் விளையாடிய வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வர காரணம் என்று ஏராளமான வீரர்கள் குற்றச்சாட்டு வருகின்றனர். குறிப்பாக 2007 முதல் 2011 வரை தோனியுடன் அனைத்து போட்டிகளிலும் விளையாடிய வீரர்கள் இப்படி கூறிய விவகாரம் குறித்து பார்க்கலாம்.
Trending
அதில் முதல் வீரராக 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளில் அதிக ரன்களை விளாசிய கம்பீர், தோனியை ஏராளமான முறை கடுமையாக சாடியுள்ளார். சமூக வலைதளங்களில் தோனியை புகழ்ந்து பேசினால், சர்ச்சை புகைப்படத்தையோ, ட்வீட்டையோ பகிர்வார். இது கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், இந்திய அணி கோப்பை வெல்ல வேண்டும் என்பதற்காக கடைசி வரிசையில் களமிறங்கி மகேந்திர சிங் தோனி தியாகம் செய்துள்ளதாக முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் பாராட்டியுள்ளது ரசிகர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய கம்பீர், “ஒரு போட்டியின் திசையை மாற்றக்கூடிய திறமை பெற்றிருந்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் தோனிதான். அவரை போன்ற பலம்வாய்ந்த ஒரு வீரர் பேட்டிங் வரிசையில் 7-வதாக பெற்றது இந்திய கிரிக்கெட் அணி பெற்ற வரம்.
தோனியின் தொடக்க காலங்களை போலவே அவர் பேட்டிங்கில் 3ஆவதாக களமிறங்கி இருந்தால், பல்வேறு ஒரு நாள் சாதனைகளை கண்டிபாக முறியடித்திருப்பார். பல சதங்களை அடித்திருப்பார். கேப்டன் பொறுப்பை ஏற்றதால் பேட்டிங் வரிசையில் 6, 7ஆவது இடத்தில் களமிறங்கி தனது பேட்டிங்கை தியாகம் செய்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now