
MS Dhoni Shares Video Of Him Ploughing Farm With Tractor (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, மற்ற வீரர்களைப் போன்று பொதுவெளியில் அடிக்கடி தோன்றி மக்கள் பார்வையில் இருப்பவர் அல்ல. பொதுவாக சமூக ஊடகங்களில் இருந்து விலகியே இருப்பார். எப்போதாவதுதான் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த புகைப்படங்கள் காணொளிகளை ஷேர் செய்வார்.
மேலும் இன்ஸ்டாகிராமில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அட்டேட்கள் வெளியிடுவதை பெரும்பாலும் தவிர்ப்பார். இந்நிலையில், தோனி இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு காணொளியை ஷேர் செய்துள்ளார்.
அதில், 'புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி. ஆனால் வேலையை முடிக்கத்தான் அதிக நேரம் எடுத்தது' எனவும் பதிவிட்டுள்ளார். அந்த காணொளி, அவர் டிராக்டர் ஓட்டி தனது பண்ணையில் வயலை உழுவதை காணமுடிகிறது. விவசாயியாக மாறிய தோனியின் இந்த புதிய காணோளி வைரலாகி வருகிறது.