
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட்டின் மிக வெற்றிகரமான கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி இன்று தனது 42வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. அவருடன் விளையாடிய வீரர்கள், இளம் வீரர்கள், அரசியல்வாதிகள், பிசிசிஐ நிர்வாகிகள் என்று பல பக்கங்களில் இருந்தும் வாழ்த்துக்கள் வந்து கொண்டிருக்கிறது.
உலக கிரிக்கெட் 50 ஓவர் உலகக் கோப்பை 20 ஓவர் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என மூன்றையும் வென்ற ஒரே சாதனை கேப்டனாக மகேந்திர சிங் தோனி ஒருவர் மட்டுமே இருக்கிறார். மகேந்திர சிங் தோனி தன் வெற்றிகளால் மட்டும் அல்லாமல் தன்னுடைய ஆட்ட அணுகு முறையாலும் வீரர்களை திறமையாக புத்திசாலித்தனமாக வழிநடத்தும் முறையிலும் பலரையும் கவர்ந்த ஒரு கேப்டனாக தனித்துவமானவராக விளங்குகிறார்.
மற்றவர்களை விட அவரது அதிகபட்ச புகழ்வான வாழ்க்கைக்கு இதுவே மிக முக்கிய காரணமாக இருக்கிறது. இன்று புகழில் எவ்வளவோ மடங்கு உயர்ந்து, எவ்வளவோ பணத்தை சம்பாதித்து இருக்கும் மகேந்திர சிங் தோனி, ஆரம்ப காலகட்டத்தில் தன் மனைவியிடம் தன் எதிர்கால வாழ்வு குறித்து என்ன பகிர்ந்து கொண்டார் என்று தற்பொழுது இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் பகிர்ந்து இருக்கிறார்.