தோனி இருந்திருந்தால் இந்தியா இன்னும் 2 கோப்பைகளை வென்றிருக்கும் - ரிக்கி பாண்டிங்!
தோனி டெஸ்ட் கேப்டனாக இருந்தபோது இது போன்ற தொடர்கள் வந்திருந்தால் இன்னும் இரண்டு கோப்பைகளை பெற்றுக் கொடுத்திருப்பார் என ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்திருக்கிறார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இரண்டாவது முறையாக முன்னேறிய இந்திய அணி இம்முறை வெற்றி பெறும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஏனெனில் கடந்த முறை வந்தபோது நியூசிலாந்து அணி இடம் தோல்வியை தழுவி வெளியேறியது. ஆகையால் இம்முறை வெற்றி பெறும் முனைப்பில் முதலில் பவுலிங் செய்தது. இந்திய அணிக்கு அந்த முடிவு எந்த வகையிலும் சாதகமாக அமையவில்லை. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 469 ரன்கள் அடிக்க, இந்திய அணி 296 ரன்களுக்கு அளவுக்கு ஆனது.
இதனையடுத்து இரண்டாவது இன்னிசையில் ஆஸ்திரேலியா அணி 270 ரன்கள் அடித்து 443 ரன்கள் முன்னிலை பெற்றது. இவ்வளவு பெரிய இலக்கை இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் சேஸ் செய்தது இல்லை இருப்பினும் நம்பிக்கையுடன் சேஸ் செய்த இந்திய அணி நான்காம் நாள் முடிவில் 164 ரன்கள் மூன்று விக்கெட்டுகளை இழந்து, களத்தில் விராட் கோலி மற்றும் ரஹானே இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.
Trending
ஐந்தாம் நாளில் இவர்கள் இருவரும் நல்ல ஸ்கோருக்கு எடுத்துச் செல்வர் என எதிர்பார்த்து இருந்தபோது, ஐந்தாவது நாளில் வெறும் ஐந்து ரன்கள் அடித்து அவுட் ஆனார் விராட் கோலி. மொத்தமாக இரண்டாவது இன்னிங்சில் 49 ரன்கள் அடித்திருந்தார். அடுத்ததாக ரகானே 46 ரன்களுக்கு அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்கள் வரிசையாக ஆட்டமிழக்க, 234 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆனது. இதனால் 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து தொடர்ந்து இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வரை வந்து கோப்பையை இழந்துள்ளது இந்திய அணி.
அத்துடன் 2013 ஆம் ஆண்டிற்கு பிறகு நான்கு முறை இறுதிப்போட்டி மற்றும் 4 முறை அரையிறுதி போட்டி வந்து ஐசிசி நடத்தும் அனைத்து நாக்கவுட் போட்டிகளிலும் தோல்வியை தழுவி வெளியேறியுள்ளது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோப்பையை வெல்லாமல் இருக்கிறது. அந்த அவப்பெயர் இன்னும் நீடித்து வருகிறது. கடைசியாக தோனி தலைமையிலான இந்திய அணி 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஷிப் வென்றது. அவர் தலைமையில அனைத்துவித ஐசிசி கோப்பைகளையும் வென்றிருக்கிறது. அப்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இல்லை. கடந்த 2020 ஆம் ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி எந்தவித ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை என்பதை சுட்டிக்காட்டி தோனி இருந்தபோது டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடந்திருந்தால் வெற்றி பெற்று தந்திருப்பார் என ரிக்கி பாண்டிங் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “தோனி இந்திய அணிக்காக அனைத்துவித ஐசிசி கோப்பைகளையும் பெற்று தந்திருக்கிறார். வரலாற்றில் அதனை செய்து காட்டிய ஒரே கேப்ட்டனாகவும் இருக்கிறார். அவர் டெஸ்ட் கேப்டனாக இருந்தபோது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடந்திருந்தால் கண்டிப்பாக குறைந்தபட்சம் இரண்டு முறை அந்த கோப்பைகளை பெற்று தந்திருப்பார். அவரும் இப்போது இல்லை. துரதிஷ்டவசமாக இந்திய அணி அவர் போனபிறகு எந்தவித கோப்பையை வெல்லவில்லை” என்றார்.
Win Big, Make Your Cricket Tales Now