
இந்திய கிரிக்கெட்டில் மிகத் தாக்கம் நிறைந்த வீரர் என்றால் சில காலங்களுக்கு முன்பு வரை பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என கபில்தேவ் முன்னணியில் இருந்தார். ஆனால் தற்காலத்தில் பேட்டிங், கீப்பிங், கேப்டன்சி, பினிஷிங் என நான்கு துறைகளில் மிகவும் தாக்கத்தை தரக்கூடிய வீரராக மகேந்திர சிங் தோனிதான் முன்னணியில் இருக்கிறார் .
சர்வதேச கிரிக்கெட்டை விட்டு வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுடைய புகழ் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கும். இதற்கு எந்த வீரர்களும் விதிவிலக்காக இருந்தது கிடையாது. ஆனால் உலக கிரிக்கெட் மகேந்திர சிங் தோனிக்கு மட்டும்தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் புகழ் ஒவ்வொரு வருடமும் அதிகமாகிக் கொண்டே போகிறது.
தற்போது 40 வயதை தாண்டிய அவர் கேப்டனாக ஐபிஎல் தொடரில் இந்த வருடம் கோப்பையை வென்று அசத்தியிருக்கிறார். மேலும் அடுத்த வருடமும் ஐபிஎல் விளையாட தயாராக இருக்கிறார். இந்த நிலையில் மகேந்திர சிங் தோனி நீண்ட தலை முடியுடன் ஆரம்ப காலத்தில் வந்தது போல தன்னுடைய கடைசி வருட கிரிக்கெட் விளையாட்டின் காலத்திலும் ரசிகர்களுக்காக வருகை தர இருக்கிறார் என்கின்ற செய்தி தற்பொழுது வந்திருக்கிறது.