
இந்திய அணி வரும் 26ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் விளையாடவுள்ள வீரர்களின் பட்டியலை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது.
இதில் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ரஹானேவின் பெயர் இடம் பெற்றது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. சமீபத்தில் இந்தியா-நியூஸிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்தது. இதன் முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் 35 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 ரன்கள் மட்டுமே ரஹானே எடுத்தார்.
கடைசியாக ரஹானே விளையாடிய 10 டெஸ்ட் இன்னிங்சில் 2 முறை மட்டுமே 20 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். இதனால் இவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.