
Mumbai Indians Captain Rohit Sharma Appreciate BCCI's decision (Image Source: Google)
கரோனா தொற்று பரவல் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரை பிசிசிஐ ஒத்தி வைத்துள்ளது. இந்நிலையில், பிசிசிஐயின் முடிவை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பாராட்டி உள்ளார் .
மும்பை இன்டியன்ஸ் அணி வெளியிட்டுள்ள விழிப்புணர்வு காணொலி மூலம் ரோகித் இதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா“எதிர்பாராத விதமாக ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு பார்த்தால் தொடரை ஒத்திவைப்பதாக அறிவித்த பிசிசிஐயின் முடிவு நல்லதொரு முடிவு என சொல்லலாம். அரசு சொன்ன விதிகளை பின்பற்றி கரோனாவை விரட்டி அடிப்போம்” என தெரிவித்துள்ளார்.