மும்மை இந்தியன்ஸை புறக்கணிக்கும் ரசிகர்கள்; சிஎஸ்கேவுக்கு முதலிடம்!
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டதை தொடர்ந்து அந்த அணியை சமூக வலைதளங்களில் பின் தொடர்வதிலிருந்து ரசிகர்கள் விலகி வருகின்றனர்.
அண்மையில் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து ஹார்திக் பாண்டியா தான் முன்பு விளையாடிய அணியான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மீண்டும் இணைந்தார். கடந்த இரண்டு சீசன்களாக குஜராத் டைட்டன்ஸ் அணியை பாண்டியா கேப்டனாக வழிநடத்தி வந்தார். அவர் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்புவதாக எடுத்த முடிவுக்கு மதிப்பளித்து அவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேடிங் முறையில் விற்றது குஜராத் டைட்டன்ஸ்.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹார்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவாரென மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நேற்று அறிவித்தது. இதனால் ரோஹித் சர்மா மற்றும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் விரக்தியில் இருக்கிறார்கள். அவர்களது எதிர்ப்பை காட்டும் விதமாக இன்ஸ்டாவில் மும்பை இந்தியன்ஸ் பக்கத்தினை பின் தொடர்வதில் இருந்து விலகி வருகிறார்கள்.
Trending
Rohit Sharma Effect!#MumbaiIndians #RohitSharma #HardikPandya #IPL2024 pic.twitter.com/OqU4ZBcKcA
— CRICKETNMORE (@cricketnmore) December 16, 2023
இதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் பக்கத்தின் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 13.2 மில்லியனிலிருந்து 12.9 மில்லியனுக்கு குறைந்துள்ளது. இதன் விளைவாக சிஎஸ்கே அணி 13 மில்லியனுடன் முதலிடம் பிடித்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் இந்த இரண்டு சாம்பியன் அணிகளுக்கு எப்போதும் போட்டியிருக்கும். இதில் 5 முறை இரண்டு அணிகளும் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now