
இந்திய அணியின் சீனியர் வீரரும், தமிழக கிரிக்கெட் வீரருமான முரளிவிஜய் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக தொடர்ச்சியாக விளையாடி வந்தார். ஆனால் கடந்த 2018ஆம் ஆண்டிற்குப் பிறகு அவர் இந்திய அணியில் சேர்க்கப்படாமல் இருந்துவருகிறார். அதனை தொடர்ந்து ஐபிஎல் தொடரிலும் 2020ஆம் ஆண்டு வரை விளையாடிய அவர் அதன் பின்னர் ஐபிஎல் அணிக்காகவும் விளையாடவில்லை.
கடைசியாக சிஎஸ்கே அணிக்காக பங்கேற்று விளையாடி இருந்த முரளி விஜய் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரிலும் விளையாடவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் கம்பேக் கொடுத்து தற்போது தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் திருச்சி அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இப்படி இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் டிஎன்பிஎல் மூலம் கம்பேக் கொடுத்தது குறித்து பேசியுள்ள முரளி விஜய் ஏன் இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடவில்லை என்பது குறித்தும் பேசியுள்ளார்.