Advertisement

லெக் ஸ்பின்னர்களில் ரவி பிஷ்னாய் தனித்துவமாக இருக்கிறார் - முத்தையா முரளிதரன்!

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னாய் தனித்துவம் மிக்கவராக இருப்பதாக சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Advertisement
லெக் ஸ்பின்னர்களில் ரவி பிஷ்னாய் தனித்துவமாக இருக்கிறார் - முத்தையா முரளிதரன்!
லெக் ஸ்பின்னர்களில் ரவி பிஷ்னாய் தனித்துவமாக இருக்கிறார் - முத்தையா முரளிதரன்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 04, 2023 • 09:09 PM

இந்திய அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய். இவர் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் தொடர் நாயகன் விருதை தட்டி சென்றார். அதுமட்டுமல்லாமல் இருதரப்பு டி20 தொடரில் இந்திய அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியல் ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனையை சமன் செய்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
December 04, 2023 • 09:09 PM

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்கு எப்போதெல்லாம் விக்கெட் தேவை எழுந்ததோ, அப்போதெல்லாம் ரவி பிஷ்னாய் பந்துவீச அழைக்கப்பட்டார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் அவர் மீது வைத்த நம்பிக்கையை ஒவ்வொரு முறையும் காப்பாற்றி அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இதனால் இந்திய டி20 அணியின் நிரந்தர ஸ்பின்னராக ரவி பிஷ்னாய் பார்க்கப்பட்டு வருகிறார்.

Trending

லெக் ஸ்பின்னர் என்றாலும் பெரியளவில் ஸ்பின் செய்ய முடியாத ரவி பிஷ்னாய், அதிகளவிலான கூக்ளி பந்துகளை வீசி விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார். அதேபோல் இவர் ஏர் ஸ்பீட் ரஷீத் கானை விடவும் கூடுதல் வேகத்தில் இருப்பதால், இவரது கூக்ளிகளை கண்டுபிடிக்க பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர். இந்த நிலையில் ரவி பிஷ்னாய்-க்கு சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் முரளிதரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய முத்தையா முரளிதரன், “இந்திய அணி தொடர்ச்சியாக நீண்ட காலமாக தரமான ஸ்பின்னர்களை உருவாக்கி வருகிறது என்று நினைக்கிறேன். ஏனென்றால் எங்கள் காலத்தில் அனில் கும்ப்ளே, இப்போது ரவிச்சந்திரன் அஸ்வின் என்று அடுத்தடுத்து உருவாகியுள்ளனர். தற்போது இளம் ஸ்பின்னர்கள் எழுச்சியுடன் பந்துவீசி வருகிறார்கள். அதிலும் லெக் ஸ்பின்னர்களில் ரவி பிஷ்னாய் தனித்துவமாக இருக்கிறார்.

அவர் வீசும் ஒவ்வொரு பந்தையும் அதிக வேகத்தில் வீசுவதோடு, கணிக்க முடியாத வகையில் பந்தை பயன்படுத்துகிறார். அதேபோல் அக்சர் படேலின் பந்துவீச்சில் துல்லியம் இருக்கிறது. பெரியளவில் ஸ்பின் செய்யாமல், பிட்சிங் மற்றும் வேகத்தில் கவனமாக உள்ளார். அவரை போலவே வாஷிங்டன் சுந்தரும் ஸ்பின் இல்லையென்றாலும் சிறப்பாக செயல்படுகிறார்” என தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement