
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பேற்றிருந்த இத்தொடரில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவுள்ளன.
இந்நிலையில் தற்போது இந்த நான்கு அணிகளில் எந்த இரண்டு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 8 வெற்றி 3 தோல்விகளுடன் 17 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியளின் 3ஆம் இடத்தில் உள்ளது. அதனால் எஞ்சிய போட்டிகளில் அந்த அணி வெற்றிபெற்று முதலிரண்டு இடங்களைப் பிடிக்க கடுமையாக போராடி வருகிறது.
அந்தவகையில் பஞ்சாப் கிங்ஸ் அணி தங்களுடைய அடுத்த லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இப்போட்டிக்காக அந்த அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகியுள்ள இளம் அதிரடி வீரர் முஷீர் கான் ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.