Advertisement

BAN vs SL: ரஹீம், மெஹதி ஹாசன் அபாரம்; இலங்கையை பந்தாடியது வங்கதேசம்!

இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan May 24, 2021 • 12:05 PM
Mushfiqur, Mehidy Hasan shine as Bangladesh beat Sri Lanka in first ODI
Mushfiqur, Mehidy Hasan shine as Bangladesh beat Sri Lanka in first ODI (Image Source: Google)
Advertisement

இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி தாக்காவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது. 

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் லிட்டன் தான், ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் தமிம் இக்பால் - முஷ்பிக்கூர் ரஹீம் இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

Trending


இதில் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதையடுத்து 52 ரன்களில் தமிம் இக்பால் ஆட்டமிழக்க, மறுமுனையில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட முஷ்பிக்கூர் ரஹீம் 84 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் மஹ்மதுல்லா அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து அணிக்கு உதவினார். 

இதனால் 50 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் தனஞ்சய டி சில்வா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியில் குசால் பெரேரா, குணத்திலகா, குசால் மெண்டீஸ், டி சில்வா என அனைவரும்  எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர். 

இருப்பினும் வனிந்து ஹசரங்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு நம்பிக்கை அளித்தார். பின் அவரும் 74 ரன்களில் ஆட்டமிழக்க, 48.2 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 224 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

இதன்மூலம் வங்கதேச அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. வங்கதேச அணி தரப்பில் மெஹதி ஹசன் 4 விக்கெட்டுகளையும், முஸ்தபிசூர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மேலும் சிறப்பாக விளையாடிய முஷ்பிக்கூர் ரஹீம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement