
Mushfiqur Rahim World Record: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலம் வங்கதேச அணியின் அனுபவ வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் வங்கதேச அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்த நிலையிலும் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் முஷ்ஃபிகூர் ரஹிம் அகியோரின் அபாரமான சதங்கள் காரணமாக முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 292 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 148 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் முஷ்ஃபிக்கூர் ரஹிம் 150 ரன்களைக் கடந்தார். அதேசமயம் அவருடன் இணைந்த லிட்டன் தாஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடக்க, வங்கதேச அணியின் ஸ்கோரும் 420 ரன்களைக் கடந்துள்ளது.