
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் அயர்லாந்து அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் முதல் போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று சில்ஹேட்டில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு கேப்டன் தமிம் இக்பால் - லிட்டன் தாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடி காட்ட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. பின் 23 ரன்களைச் சேர்த்திருந்த தமிம் இக்பால் தனது விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் இணைந்த லிட்டன் தாஸ் - நஜ்முல் ஹொசைன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ரன் ரேட்டை குறையாமல் பார்த்துக்கொண்டனர். இதில் இவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் கடக்கம் அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. ஒரு கட்டத்தில் இருவரும் சதமடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது.