AFG vs BAN: காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகிய முஷ்ஃபிக்கூர் ரஹிம்!
விரலில் ஏற்பட்டுள்ள எழும்பு முறிவின் காரணமாக வங்கதேச அணி விக்கெட் கீப்பர் பேட்டர் முஷ்ஃபிக்கூர் ரஹீம் ஆஃப்கானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அஃப்கானிஸ்தான் அணியானது தற்சமயம் வங்கதேச அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியானது நேற்று முன் தினம் ஷார்ஜாவில் நடந்து முடிந்தது. இப்போட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஃப்கானிஸ்தான் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மனிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் ஆஃப்கானிஸ்தான் அணியும், முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வங்கதேச அணியும் இப்போட்டியை எதிர்கொள்கின்றன.
Trending
இதில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது தனது விரலில் ஏற்பட்டுள்ள எழும்பு முறிவின் காரணமாக வங்கதேச அணி விக்கெட் கீப்பர் பேட்டர் முஷ்ஃபிக்கூர் ரஹீம் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வங்கதேச அணி மருத்துவர் கூறுகையில், “ஆஃப்கானிஸ்தானின் இன்னிங்ஸின் முடிவில், முஷ்ஃபிக்கூர் ரஹிம் விக்கெட் கீப்பிங் செய்யும் போது அவரது இடது ஆள்காட்டி விரலின் நுனியில் காயம் ஏற்பட்டது. போட்டிக்குப் பிறகு எடுக்கப்பட்ட ஒரு எக்ஸ்ரே முடிவில் அவருக்கு எழும்பு முறிவு ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால் அவர் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். மேலும் அவரது காயம் குறித்த அறிவிப்புகள் உரிய நேரத்தில் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முஷ்ஃபிக்கூர் ரஹிமிற்கு ஏற்பட்டுள்ள காயம் குணமடைய குறைந்தது 6 முதல் 7 வாரங்கள் தேவைப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை அப்படி நடக்கும் பட்சத்தில் அவர் அடுத்ததாக நடைபெறவுள்ள வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பங்கேற்கமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இந்த தகவல் இதுவரை உறுதிப்படுத்தபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கதேச அணியானது அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதியும், ஒருநாள் தொடரானது டிசம்பர் 8ஆம் தேதி முதலும் டி20 தொடரானது டிசம்பர் 15ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
Win Big, Make Your Cricket Tales Now