
இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 114 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 86 ரன்களையும் சேர்த்தனர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியானது பும்ரா மற்றும் அர்ஷ்தீப் ஆகியோரின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்களை குவித்திருந்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 119 ரன்களையும், ரிஷப் பந்த் 109 ரன்களையும் சேர்த்திருந்தனர். இடஹ்ன்மூலம் வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்காகவும் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் கடின இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியில் ஸகிர் ஹசன் 33 ரன்களுக்கும், சாத்மான் இஸ்லாம் 35 ரன்களிலும் விக்கட்டை இழந்தனர்.