
ஐபிஎல் தொடரின் போது மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, இளம் வீரர் திலக் வர்மா 3 வகையான கிரிக்கெட்டுக்கான வீரராக உள்ளார். இன்னும் சில நாட்களில் வேறு ஜெர்சியில் பார்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று கூறி இருந்தார். அதற்கேற்ப வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இடதுகை பேட்ஸ்மேன்கள் இல்லாத மிடில் ஆர்டர் பிரச்சனைக்கு இந்திய அணி தீர்வை கண்டுபிடித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் திலக் வர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் 164ஆக உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் அஜிங்கியா ரஹானே மற்றும் சூர்யகுமார் யாதவ் மட்டுமே அதற்கு மேல் ஸ்ட்ரைக் வைத்துள்ளனர். இதனால் இந்திய அணிக்கு திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டதில் பெரிய ஆச்சரியம் இல்லை.
இதுகுறித்து பேசிய திலக் வர்மா, “இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. நான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன் என்று அறிந்த பின், என் தாய் மற்ற்ம் தந்தை இருவரும் வீடியோ காலில் அழைத்து கண்ணீருடன் பேசியது உணர்வுப்பூர்வமாக அமைந்தது.நான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன் என்பதை என் சிறுவயது நண்பரே முதலில் கூறினான்.