என் கனவு இப்பொழுது என் கண்முன்னே இருக்கிறது - முகேஷ் குமார்!
இந்திய அணிக்காக டெஸ்ட் விளையாட வேண்டும் என்கின்ற இடத்தில்தான் நான் இருக்க விரும்பினேன். இறுதியாக நான் அதை அடைந்து விட்டேன் என்று வேகப்பந்து வீச்சாளார் முகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு பிறகு, வெஸ்ட் இண்டீஸ் சென்று மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட இருக்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமார் இரண்டு இந்திய அணியிலும் இடம் பிடித்திருக்கிறார்.
இவரின் வாழ்க்கை கதை மற்ற இளைஞர்களுக்கு மிகவும் உத்வேகம் தரக்கூடிய ஒன்று. பல்வேறு கட்ட பிரச்சனைகளுக்குப் பிறகு இவர் எட்டி உள்ள உயரம் என்பது யாரையும் ஆச்சரியப்படுத்தக் கூடியது. தன்னுடைய மாநிலமான பீகாரில் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து தன்னுடைய தந்தைக்கு உதவி செய்வதற்காக பெண்களுக்கு வந்து அங்கு அவருக்கு இருந்த கிரிக்கெட் ஆர்வத்தில் படிப்படியாக முன்னேறி, இன்று இந்திய அணிக்கு தேர்வாகி இருக்கிறார்.
Trending
இந்நிலையில் இதுகுறித்து பேசிய அவர், “என் கனவு இப்பொழுது என் கண்முன்னே இருக்கிறது. இந்திய அணிக்காக டெஸ்ட் விளையாட வேண்டும் என்கின்ற இடத்தில்தான் நான் இருக்க விரும்பினேன். இறுதியாக நான் அதை அடைந்து விட்டேன். என் உயர்வைக் கண்டு மறைந்த என் தந்தை இப்பொழுது மகிழ்ச்சி அடைந்திருப்பார். என்னுடைய அம்மா மற்றும் அப்பா என்னுடைய நண்பர்கள் என்று எல்லோருடைய ஆதரவும் எனக்கு இருக்கும்.
சௌரவ் கங்குலி, ஜாய் தீப், எனது குரு ரணதேப், எப்போதும் என்னை வழி நடத்திய போஸ் இவர்களின் எல்லோரும் உதவியும் இல்லாமல் நான் இந்த இடத்தில் இருந்திருப்பேனா என்றால் நிச்சயம் முடிந்து இருக்காது. நான் எங்கிருந்து ஆரம்பித்தேன் தற்பொழுது எந்த இடத்தில் இருக்கிறேன் என்று யோசித்துப் பார்க்கும் பொழுது மிக மிக ஆச்சரியமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now