
உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக சாம்பியன் ஆனது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சில் 240 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அசத்தியது.
அந்த அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 137 ரன்களும், மார்னஸ் லபுஷேன் 58 ரன்களும் எடுத்து ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வழிவகுத்தனர். இந்தப் போட்டியில் லபுஷேன் நிதானமாக விளையாடி ஆஸ்திரேலியாவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியாக இருந்தார். இந்த நிலையில், அதிசயங்களை நம்பாமல் இருக்க முடியவில்லை என மார்னஸ் லபுஷாக்னே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “அதிசயங்களை நம்பாமல் இருப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. இந்த அனைத்து விஷயங்களையும் மேலிருந்து ஒருவர் நடத்திக் கொண்டிருக்கிறார். இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டிக்கான பிளேயிங் லெவன் குறித்து இறுதிப்போட்டிக்கு முன் தினம் இரவு வரை எதுவும் தெரிவிக்கவில்லை. இறுதிப்போட்டியில் நான் விளையாடுவேனா, மாட்டேனா எனத் தெரியாமல் எனது படுக்கையில் அமர்ந்திருந்தேன்.