
இந்தாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் நடத்துவதாக இருந்தது. ஆனால் இத்தொடர் பாகிஸ்தானில் நடைபெற்றால் அதில் பங்கேற்று விளையாட இந்திய அணியை அனுப்ப முடியாது என பிசிசிஐ தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இந்திய அணி இங்கு வரவில்லை என்றால் நாங்கள் இந்தாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க மாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முரண்டு பிடித்து வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய பிசிபி தலைவர் நஜம் சேதி, “இந்த விஷயத்தில் பிசிசிஐ உரிய முடிவை யோசித்து எடுக்க வேண்டும்.தொடர்ந்து முன்னேறுவதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது. நான் ஆசிய கோப்பை கிரிக்கெட்டைப் பற்றி கவலைப்படவில்லை. உலகக் கோப்பையைப் பற்றிதான் கவலை கொள்கிறேன்.
ஐசிசி ஒரு நாள் தரவரிசையில் முன்னிலையில் இருக்கிறோம். எங்கள் அணியை நீங்கள் புறக்கணித்துவிட முடியாது. எங்கள் அணியையும் எங்கள் நாட்டையும் நீங்கள் எப்படி புறக்கணிக்க முடியும்? ஆகவே ஐசிசி இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆனால், இந்த விவகாரத்தில் ஐசிசி தலையீட்டை இந்தியா விரும்பவில்லை என நினைக்கிறேன்.