முஷ்ஃபிக்கூர் ரஹிமிற்கு ஆதரவு தெரிவித்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
முஷ்ஃபிக்கூர் ரஹீம் தனது பேட்டிங்கில் மட்டுமல்லாமல், நாங்கள் களமிறங்கும் போது திட்டமிடல் குழுவின் ஒரு பகுதியாகவும் இருக்கிறார் என்று வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜிம்பாப்வே அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஏப்ரல் 28ஆம் தேதி சிட்டாகாங்கில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் வங்கதேச அணி தோல்வியைத் தழுவினாலோ அல்லது போட்டியை டிரா செய்தாலோ தொடரை இழக்கும் என்பதால் அந்த அணி கூடுதல் கவனத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
Also Read
இந்நிலையில், சில்ஹெட்டில் நடந்த முதல் டெஸ்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் முஷ்ஃபிக்கூர் ரஹீமுக்கு அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். முன்னாதாக முதல் டெஸ்டில் முஷ்ஃபிக்கூர் ரஹீம் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தமாகவே 4 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். அணியின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
முஷ்ஃபிக்கூருக்கு ஆதரவாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ கூறுகையில், “அவர் ஒரு அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர். அவர் தனது பேட்டிங்கில் மட்டுமல்லாமல், நாங்கள் களமிறங்கும் போது திட்டமிடல் குழுவின் ஒரு பகுதியாகவும் இருக்கிறார். அவர் பேட்டர்களுக்கு உதவுகிறார். பயிற்சியின் போது அவர் நிறைய பேசுகிறார். நிச்சயமாக, அவரது பேட்டிங் முக்கியமானது. அவரது மைல்கற்கள் அல்லது கடந்த கால சாதனைகளைப் பற்றி நான் சிந்திக்கவில்லை,
அவரும் அப்படி சிந்திப்பதில்லை என்று நினைக்கிறேன். இன்னும் இத்தொடரில் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில், அவர் மீண்டும் வருவார் என்று நம்புகிறேன். நான் நம்பிக்கையை இழக்கவில்லை. இதற்கு முன்பும் அவர் கடந்த காலங்களில் மோசமான ஃபார்மில் இருந்துள்ளார். ஆனால் அதிலிருந்து மீளும் வழியையும் கண்டுபிடித்துள்ளார். அதனால் இந்த போட்டியிலும் அவர் அதனை செய்வதுடன், தனது ஃபார்முக்கு திரும்புவார் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
வங்கதேச அணிக்காக கடந்த 2005ஆம் ஆண்டு அறிமுகமான முஷ்ஃபிக்கூர் ரஹீம் இதுவரை 95 டெஸ்ட் போட்டிகளில் 176 இன்னிங்ஸ்களில் விளையாடி 11 சதங்கள் மற்றும் 27 அரைசதங்களுடன் 6015 ரன்களை எடுத்துள்ளார். மேற்கொண்ட வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த வீரராகவும் உள்ளார். இதன் காரணமாக அணியின் கேப்டன் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
வங்கதேச டெஸ்ட் அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், ஷத்மான் இஸ்லாம், அனாமுல் ஹக், மொமினுல் ஹக், முஷ்ஃபிகூர் ரஹீம், மஹிதுல் இஸ்லாம் அன்கான், ஜாக்கர் அலி, மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், தன்வீர் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், கலீத் அகமது, தன்சிம் ஹசன் சாகிப்
Win Big, Make Your Cricket Tales Now