
வங்கதேச அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடியது. இதில் டெஸ்ட் தொடரை இரு அணிகளும் சமன்செய்திருந்த நிலையில், ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், டி20 தொடரில் வங்கதேச அணியும் வெற்றிபெற்று அசத்தியது. இதையடுத்து வங்கதேச அணி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் வங்கதேச டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக நஹ்முல் ஹொசைன் சாண்டோ அறிவித்துள்ளார். முன்னதாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் டெஸ்ட் அணியின் கேப்டன் பதிவில் இருந்து விலககுவதாக அறிவித்திருந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணியின் கேப்டனாக செயல்படுவார் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்ததிருந்தது.
ஆனால் காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் தொடாரில் இருந்து நஜ்முல் ஹொசைன் சாண்டோ விலகியதை அடுத்து, டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனாக மெஹிதி ஹசன் மிராஸும், டி20 அணியின் கேப்டனாக லிட்டன் தாஸும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் தான் வங்கதேச டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து நஜ்முல் ஹொசைன் சாண்டோ விலகியுள்ளார். இதனை வங்கதேச கிரிக்கெட் வாரியமும் உறுதிசெய்துள்ளது.