Advertisement

அடுத்த போட்டியில் நிச்சயம் பென் ஸ்டோக்ஸ் விளையாட வேண்டும் - நாசர் ஹுசைன்!

இங்கிலாந்து அணி தனது சிறந்த பிளேயிங் லெவனை கொண்டு வந்து மும்பை வான்கடே மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் விளையாடி வெற்றி பெறவேண்டும் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். 

Advertisement
அடுத்த போட்டியில் நிச்சயம் பென் ஸ்டோக்ஸ் விளையாட வேண்டும் - நாசர் ஹுசைன்!
அடுத்த போட்டியில் நிச்சயம் பென் ஸ்டோக்ஸ் விளையாட வேண்டும் - நாசர் ஹுசைன்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 16, 2023 • 01:56 PM

நேற்று டெல்லியில் நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்து அணி சிறிய அணியான ஆப்கானிஸ்தான் அணியிடம் தோற்று அதிர்ச்சி அளித்தது. நேற்றைய போட்டியிலும் இங்கிலாந்து அணியின் சூப்பர் ஸ்டார் பென் ஸ்டோக்ஸ் அணியில் இடம் பெறவில்லை. அவருடைய காயம் எந்த அளவிற்கு இருக்கிறது என்று தெரிவிக்கப்படவில்லை. மேலும் ஆஃப்கானிஸ்தான் என்பதால் களமிறங்காமல் இருந்தாரா? என்றும் தெரியவில்லை.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 16, 2023 • 01:56 PM

இந்த நிலையில் பந்துவீச்சில் ஆஃப்கானிஸ்தானுக்கு 284 ரன்கள் விட்டுத் தந்த இங்கிலாந்து, திரும்ப பேட்டிங் செய்ய வந்து 215 ரன்கள் மட்டுமே எடுத்தது. மேலும் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக எட்டு விக்கெட்டுகளை சுழற் பந்துவீச்சாளர்களுக்கு கொடுத்திருக்கிறது. தற்போது இங்கிலாந்தின் தோல்வி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. 

Trending

சிறிய அணியுடன் ஏற்பட்ட தோல்வி அவர்களது அரைஇறுதி வாய்ப்பை கேள்விக்குறியாகி உள்ளது. அடுத்து அவர்கள் வரக்கூடிய எல்லாப் போட்டிகளிலும் கவனமாக இருக்க வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. மேலும் அவர்கள் அடுத்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாட இருக்கிறார்கள் என்பது சோதனையாக அமைகிறது.

இந்நிலையில் இது குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன்,  “ஜோஸ் பட்லரின் அணியை பொறுத்தவரை இப்பொழுது ரிலாக்ஸ் செய்ய நேரம் கிடையாது. அவர்கள் தங்கள் உலக சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க விரும்பினால், இங்கிருந்து அவர்கள் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றாக வேண்டும்.

அதாவது அவர்களுடைய சிறந்த பிளேயிங் லெவனை கொண்டு வந்து மும்பை வான்கடே மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் விளையாடி வெற்றி பெறவேண்டும். பென் ஸ்டோக்ஸ் உடல் தகுதியுடன் இருந்தால் அவர் விளையாட வேண்டும். ஆஃப்கானிஸ்தான் என்பதால் அவர் விளையாடாமல் இருந்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன். கிறிஸ் வோக்ஸ் முழுவதுமாக நிக்கிலிலிருந்து வெளியேறவில்லை. 

இதுவரை நடந்த மூன்று போட்டிகளிலும் அது தெளிவாகத் தெரிகிறது. அவர் இயல்பாக இல்லை. அவரை இப்பொழுதே விட்டுவிட வேண்டும். உணர்ச்சிகளுக்கும் விசுவாசத்திற்கும் இது நேரம் கிடையாது. இந்த இங்கிலாந்து அணி குறிப்பாக இந்திய துணைக்கண்டத்தில் பாதிக்கப்படக்கூடிய அணியாக தெரிகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement