
மகளிர் டி20 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 135 ரன்கள் அடித்து, 136 ரன்கள் என்ற சவாலான இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது.
மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 8ஆவது பதிப்பு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி, வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான ஹைலி மேத்யூஸ் அதிரடியாக பேட்டிங் ஆடி 32 பந்தில் 42 ரன்கள் அடித்தார். 3ஆம் வரிசையில் இறங்கிய கேம்ப்பெல்லி 37 பந்தில் 34 ரன்கள் அடித்தார். இவர்கள் இருவரைத்தவிர வேறு யாரும் சரியாக ஆடவில்லை. அதனால் அந்த அணியால் 20 ஓவரில் 135 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.