அறிமுகமான முதல் போட்டியிலேயே உலக சாதனை புரிந்த எல்லீஸ்!
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான நாதன் எல்லீஸ், ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார்.
வங்கதேசம் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று தாக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் வங்கதேசம் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, முதன் முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது.
இருப்பினும் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான நாதன் எல்லீஸ் உலக சாதனை ஒன்றை புரிந்து அசத்தியுள்ளார். இப்போட்டியின் 20ஆவது ஓவரை வீசிய எல்லீஸ், மஹ்மதுல்லா, முஸ்தபிசூர், மெஹிதி ஹாசன் ஆகியோரது விக்கெட்டுகளை அடுத்தடுத்து கைப்பற்றி ஹாட்ரிக் விக்கெட்டை எடுத்தார்.
Trending
இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அறிமுகமான முதல் போட்டியிலேயே ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீரர் எனும் உலக சாதனையை நாதன் எல்லீஸ் பெற்றுள்ளார்.
இதுகுறித்து பேசிய நாதன் எல்லீஸ்,“இது ஒரு கற்பனை போன்று உள்ளது. ஏனெனில் எனது அறிமுக போட்டியில் நான் ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றுவேன் என கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் இப்போட்டியில் நான் ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றியது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இதனை என் வாழ்நாள் முழுவதும் நான் மறக்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now