
West Indies vs Australia 3rd Test: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் நாதன் லையன் சர்வதேச கிரிக்கெட்டில் கிளென் மெக்ராத், ஷேன் வார்னேவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இடையேயான மூன்றாவது போட்டி நாளை ஜூலை 12ஆம் தேதி ஜமைக்காவில் நடைபெறவுள்ளது.
இதில் ஏற்கெனவே டெஸ்ட் தொடரை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற முயற்சிக்கும். அதேசமயம் தொடரை இழந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இப்போட்டியில் ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்ய கடுமையாக போராடும். இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணி வீரர் நாதன் லையன் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.