
உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்க உதவும் ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக தொடங்கி நவம்பர் 19 வரை நடைபெற உள்ளது. தொடரை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் இத்தொடரின் கோப்பையை வெல்வதற்காக மொத்தம் 48 போட்டிகளில் விளையாட உள்ளன.
அதை தொடர்ந்து இத்தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில் அனைத்து நாடுகளும் தங்களுடைய அணியை செப்டம்பர் 5ஆம் தேதி அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி கெடு விதித்திருந்தது.
அதனால் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தங்களுடைய அணியை அறிவித்த நிலையில் ஐசிசியிடம் நேரடியாக சமர்ப்பித்த தங்களுடைய 15 பேர் அணியை நியூசிலாந்து இன்று தான் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பை தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.