
16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி விட்டன . முதல் குவாலிஃபையர் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. இதையடுத்து, நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் மும்பை அணி இலக்கணம் வீழ்த்தி இரண்டாவது குவாலிஃபையர் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது .
மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது குவாலிஃபையர் போட்டி நாளை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது . அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை சென்னை அணியுடன் இறுதிப்போட்டியில் விளையாடும். நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி லக்னோவை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது . இந்தப் போட்டியில் சிறப்பாக வந்து வீசிய ஆகாஷ் மத்வாள் 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி மும்பை அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.
முன்னதாக லக்னோ அணிக்காக ஆஃப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக் 38 ரண்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தத் தொடர் முழுவதுமே அவர் சிறப்பாக செயல்பட்டு வந்தார் . லக்னா மற்றும் பெங்களூர் அணிகள் மோதிய போட்டியின் போது இவருக்கும் விராட் கோலிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் சர்ச்சையாக கிளம்பியது . இதனைத் தொடர்ந்து லக்னோ அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் மற்றும் நவீன் ஆகிய இருவரையும் விராட் கோலியின் ரசிகர்கள் தொடர்ந்து கிண்டல் செய்து வருகின்றனர் .