நிச்சயம் அடுத்த போட்டியில் நாங்கள் வெற்றி பாதைக்கு திரும்பவும் - ஹஷ்மதுல்லா ஷாஹிதி!
இதுபோன்ற போட்டிகளில் நாங்கள் செய்யும் தவறுகளை வைத்து அடுத்த முறை இதே போன்ற தவறுகளில் செய்யாமல் இருக்கவும் பாடத்தினை கற்றுள்ளோம் என ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தெரிவித்துள்ளார்.
நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் மூன்றாவது போட்டியில் இமாச்சல் பிரதேசம் தர்மசாலா மைதானத்தில் ஆஃப்கானிஸ்தான் – வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் துவக்க ஆட்டக்காரர்கள் நன்றாகவே ஆரம்பித்தார்கள்.
வங்கதேச அணிக்கு இப்ராஹிம் ஜட்ரன் விக்கெட்டை வீழ்த்தி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் முதல் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார். அங்கிருந்து மொத்தமாக அப்படியே ஆஃப்கானிஸ்தான் அணி விழுந்தது. 37 ஓவர்களில் 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தச் சிறிய இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி 34 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Trending
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஷாஹிதி, “இந்த போட்டியில் நாங்கள் நன்றாகவே துவங்கினோம். ஆனாலும் எங்களது மோசமான ஷாட் செலக்சன் காரணமாகவே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தோம். இருந்தாலும் நாங்கள் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக போராடியதாக நினைக்கிறேன்.
ஆனாலும் போதுமான அளவு ரன்கள் குவிக்கவில்லை என்பதனால் இந்த தோல்வியை நாங்கள் சந்தித்துள்ளோம். இதிலிருந்து முன்னேறி அடுத்த போட்டிக்கு சிறப்பாக திரும்புவோம். இதுபோன்ற போட்டிகளில் நாங்கள் செய்யும் தவறுகளை வைத்து அடுத்த முறை இதே போன்ற தவறுகளில் செய்யாமல் இருக்கவும் பாடத்தினை கற்றுள்ளோம். எனவே நிச்சயம் அடுத்த போட்டியில் நாங்கள் வெற்றி பாதைக்கு திரும்பவும்” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now