
ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு அடுத்து மூன்றாவது வடிவமாக இடம் பிடித்த இந்த டி20 போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்போது டி20 போட்டிகள் நிறைவே நடைபெற்று வருகின்றன. அது தவிர்த்து உலகெங்கிலும் டி20 லீக் தொடர்களும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சர்வதேச அணிகள் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மோதும் வகையில் டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை நடைபெற்று முடிந்த 8 டி20 உலககோப்பை தொடர்களில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளன.
அதை தவிர்த்து இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தலா ஒரு முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. இந்நிலையில் ஐசிசியின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்க உள்ளன. அதில் ஐசிசி டி20 தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.