
இந்தியா - நேபாள் அணிகளுக்கு இடையேயான ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டி நேற்று கண்டி நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் பலம் வாய்ந்த இந்திய அணியை எதிர்த்து களமிறங்கிய நேபாள் அணி ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் பாராட்டினை பெற்றது.
அந்த வகையில் நேற்றைய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ய முதலில் விளையாடிய நேபாள் அணியானது துவக்கத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பான ஓப்பனிங்கை கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு அந்த அணி 10 ஓவர்களில் 65 ரன்கள் குவித்து ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்தது.
ஆனால் அதன்பிறகு இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை அந்த அணி இழந்தாலும் இந்தியா போன்ற பலமான அணிக்கு எதிராக ஓரளவு சிறப்பான போராட்டத்தை அளித்து இறுதியில் 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்களை குவித்தது. அந்த அணி சார்பாக துவக்க வீரர் ஆஷிக் ஷேக் 58 ரன்களையும், சோம்பல் காமி 48 ரன்களையும் குவித்தனர்.