Advertisement

43 ஆண்டுகளில் இப்படி ஒரு ஆட்டத்தை இதுவரை கண்டதில்லை - சந்திரகாந்த் பண்டிட்!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ரிங்கு சிங் அடுத்தடுத்து 5 சிக்சர்களை பறக்கவிட்டு அசத்ததியதை கேகேஆர் அணியின் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் பாராட்டியுள்ளார். 

Advertisement
Never seen anything like this in 43 years: KKR coach Chandrakant Pandit awestruck by Rinku Singh's k
Never seen anything like this in 43 years: KKR coach Chandrakant Pandit awestruck by Rinku Singh's k (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 10, 2023 • 08:05 PM

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 205 ரன்களை இலக்காக நிரணயித்தது. அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய கேகேஆர் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
April 10, 2023 • 08:05 PM

அதிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவை என்று இருந்தபோது 5 சிக்ஸர்களை பறக்க விட்டு அணியை வெற்றி பெறச் செய்ததோடு பல சாதனைகளையும் படைத்திருக்கிறார் ரிங்கு சிங்.

Trending

ஐபிஎல் வரலாற்றில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து போட்டியை ஜெயித்துக்கொடுத்த ரிங்கு சிங்கிற்கு பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில்  கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் ரிங்கு சிங்கை பாராட்டி பேசியிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர், "என்னுடைய இத்தனை வருட கிரிக்கெட் வாழ்க்கையில் பல போட்டிகளை ஒரு வீரராகவும், பயிற்சியாளராகவும் இருந்து பார்த்திருக்கிறேன். அதில் இரண்டு போட்டிகள் என்னால் மறக்கவே முடியாது அந்த இரண்டு போட்டிகளும் என்னைமிகவும் வியக்க வைத்தது. அதில் ஒன்று  ரஞ்சிக்கோப்பையில் ரவி சாஸ்திரி ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த போட்டி. 

இரண்டாவது கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றி பெற்றுக் கொடுத்த பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியான்தத். ஆனால் இன்று இந்த இரண்டு ஆட்டங்களையும் மிஞ்சும் அளவிற்கு ரிங்கு சிங் ஆட்டம் இருந்தது. 43 ஆண்டுகளில் இப்படி ஒரு ஆட்டத்தை இதுவரை கண்டதில்லை.” என்று பாராட்டி இருக்கிறார்.  

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement