
2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அணிகளும் தங்களது பணிகளை வேகமாக தயார்படுத்தி வருகின்றன. 2 புதிய அணிகளும் மெகா ஏலத்திற்கு முன்பு, தாங்கள் ஒப்பந்தம் செய்யவுள்ள வீரர்களை இறுதி செய்துவிட்டன. குறிப்பாக லக்னோ அணி தனது இறுதிகட்ட பணியையே முடிக்க ஆயத்தமாகியுள்ளது.
அந்த அணியின் பெயர் என்னவாக இருக்கும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் என்ன பெயர் என்ற தகவலை அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் "லக்னோ ரேஞ்சர்ஸ்" என பெயர் வைக்கப்படவுள்ளதாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
அந்த பதிவில் லக்னோ என்ற வார்த்தையை மட்டும் காண்பித்துவிட்டு, அதற்கு அடுத்து என்ன வார்த்தை என்பதை மறைத்துள்ளனர். இதனால் "லக்னோ பேந்தர்ஸ்" எனவும் இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்த அணி வெளியிடலாம்.