பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் தற்சமயம் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது நடைபெற்றது.
அதன்படி இந்த தொடரில் இதுவரை நான்கு போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் அதில் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை வெலிங்டனில் உள்ள ஸ்கை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதன்பிறகு இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது நடைபெற இருக்கிறது.
Trending
இந்நிலையில் பாகிச்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இந்த அணிக்கு கேப்டனாக டாம் லேதம் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு இந்த அணியில் மைக்கேல் பிரேஸ்வெல், டேரில் மிட்செல், வில் யங், மார்க் சாப்மேன், வில்லியம் ஓ ரூர்க், ஜேக்கப் டஃபி ஆகியோருடன் அறிமுக வீரர்கள் நிக்கி கெல்லி மற்றும் முகமது அப்பாஸ் ஆகியோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மறுபக்கம் பாகிஸ்தான் ஒருநாள் அணி முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் முகமது ரிஸ்வான் தலைமையிலான இந்த அணியில் பாபர் ஆசாம், நசீம் ஷா உள்ளிட்டோருக்கும் இடம் கிடைத்துள்ளது. முன்னதாக கடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக இவர்கள் மூவரும் டி20 அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து ஒருநாள் அணி: டாம் லாதம் (கேப்டன்), முகமது அப்பாஸ், ஆதி அசோக், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜேக்கப் டஃபி, மிட்ச் ஹே, நிக் கெல்லி, டேரில் மிட்செல், வில் ஓ'ரூர்க், பென் சியர்ஸ், நாதன் ஸ்மித், வில் யங்
Also Read: Funding To Save Test Cricket
பாகிஸ்தான் ஒருநாள் அணி: முகமது ரிஸ்வான் (கேப்டன்), சல்மான் அலி ஆகா, அப்துல்லா ஷஃபீக், அப்ரார் அகமது, அகிஃப் ஜாவேத், பாபர் ஆசாம், ஃபஹீம் அஷ்ரப், இமாம் உல் ஹக், குஷ்தில் ஷா, முகமது அலி, முகமது வாசிம் ஜூனியர், இர்பான் நியாசி, நசீம் ஷா, சுஃபியான் முகீம், தயப் தாஹிர்.
Win Big, Make Your Cricket Tales Now