Advertisement

மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: சோஃபி டிவைன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு!

எதிர்வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் சோஃபி டிவைன் தலைமையிலான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

Advertisement
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: சோஃபி டிவைன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: சோஃபி டிவைன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 10, 2024 • 09:49 AM

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது எதிர்வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் இத்தொடரில் பங்கேற்கும் நிலையில், அந்த அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி பிவிரில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 10, 2024 • 09:49 AM

மேற்கொண்டு இந்த உலகக்கோப்பை தொடருக்கான புதுபிக்கப்பட்ட போட்டி அட்டவணையையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அதன் படி, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தானின் மகளிர் அணிகளை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. 

Trending

அதேசமயம் இத்தொடருக்கான நியூசிலாந்து மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. மேலும் எதிர்வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருடன் அந்த அணியின் கேப்டன் சோஃபி டிவைன் தனது பதவியில் இருந்து விலகுவார் என்றும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்த நிலையிலும், அதற்கெற்றவாரே எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக சோஃபி டிவைன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கொண்டு அணியின் நட்சத்திர வீராங்கனைகள் சூஸி பேட்ஸ், லியா தஹூஹு, அமெலியா கெர், மேடி கிரீன், ஜெஸ் கெர் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நியூசிலாந்து அணியானது முதல் லீக் போட்டியில் வலிமை வாய்ந்த இந்திய அணியை எதிர்த்து அக்டோபர் 4ஆம் தேதி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதற்கு முன் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுகு எதிராக பயிற்சி போட்டியில் விளையாடவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: Funding To Save Test Cricket

நியூசிலாந்து மகளிர் அணி: சோஃபி டிவைன் (கே), சுஸி பேட்ஸ், ஈடன் கார்சன், இஸி கேஸ், மேடி கிரீன், ப்ரூக் ஹாலிடே, ஃபிரான் ஜோனாஸ், லீயா காஸ்பெரெக், அமெலியா கெர், ஜெஸ் கெர், ரோஸ்மேரி மெய்ர், மோலி பென்ஃபோல்ட், ஜார்ஜியா ப்ளிம்மர், ஹன்னா ரோவ், லியா தஹுஹு.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement