இந்த தொடர் முழுவதும் நாங்கள் சவால்களைச் சந்தித்தோம் - மிட்செல் சான்ட்னர்!
இப்போட்டியில் நாங்கள் எதிர்பார்த்ததை விட 20-25 ரன்கள் குறைவாக எடுத்ததே எங்களின் தோல்விக்கு காரணம் என்று நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் தெரிவித்துள்ளார்.
-mdl.jpg)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டேரில் மிட்செல் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர். இதில் டேரில் மிட்செல் 63 ரன்களையும், மைக்கேல் பிரேஸ்வெ ல் 53 ரன்களையும் சேர்க்க, ரச்சின் ரவீந்திரா 37 ரன்களையும், கிளென் பிலீப்ஸ் 34 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்காளைச் சேர்க்க தவறினர். இதனால் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்களைச் சேர்த்தது.
Also Read
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 76 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 48 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்த நிலையில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கேஎல் ராகுல் 34 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன்மூலம் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியதுடன், மூன்றாவது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய மிட்செல் சான்ட்னர், “இது எங்களுக்கு ஒரு நல்ல போட்டியாக இருந்தது. இந்த பயணம் முழுவதும் நாங்கள் சவால்களை எதிர்கொண்டோம், ஆனால் நாங்கள் ஒரு குழுவாக நம்மை வளர்த்துக்கொண்டு சில நல்ல கிரிக்கெட்டை விளையாடிய விதம் பாராட்டுக்குரியது. இன்று நாம் ஒரு சிறந்த அணியால் தோற்கடிக்கப்பட்டோம். எங்கள் குழு நிறைய நல்ல விஷயங்களைச் செய்தது, ஒவ்வொருவரும் வெவ்வேறு நேரங்களில் பங்களித்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
ஒரு கேப்டனாகவும் ஒரு அணியாகவும் நீங்கள் விரும்புவது இதுதான். நாங்கள் நன்றாகப் பந்து வீசினோம். ஆனால் பேட்டிங்கின் போது பவர்பிளேக்குப் பிறகு சில விக்கெட்டுகளை இழந்தோம், பின்னர் அவர்கள் எங்கள் மீது அழுத்தம் கொடுத்தனர். அவர்கள் பந்து வீசிய விதத்திற்காக அவர்களின் முழுப் பெருமையும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கே உரித்தானது. அவர்கள் அனைவரும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள். நாங்கள் எதிர்பார்த்ததை விட 20-25 ரன்கள் குறைவாக எடுத்ததே தோல்விக்கு காரணம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now