
நியூசிலாந்து அணியில் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன். இவர் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஜராத் அணி பீல்டிங்கின் போது சிஎஸ்கே அணி வீரர் ருதுராஜ் அடித்த பந்தினை பவுண்டரி லைனில் தடுக்க பாய்ந்து குதித்தபோது கால்கள் மடங்கி கீழே விழுந்தார். சிக்ஸரை தடுத்து பவுண்டரியாக மாற்றினார்.
ஆனால் கீழே விழுந்த வில்லியம்சன் எழ முடியவில்லை. பின்னர் ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். இந்த காயம் காரணத்தினால் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினார். இதுமட்டுமில்லாமல் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியிலும் விளையாட முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
டெஸ்டில் டிம் சௌதி கேப்டனாகவும் தற்போதைக்கு ஒருநாள் போட்டிகளில் டாம் லேதம் கேப்டனாகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் யார் அடுத்து கேப்டன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு நியூசிலாந்தின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் பதிலளித்துள்ளார்.