
நியூசிலாந்து மகளிர் அணி சமீபத்தில் இலங்கை மகளிர் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றிய நிலையில், டி20 தொடரானது 1-1 என்ற கணக்கில் சமன்செய்தது.
இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து மகளிர் அணி ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது மார்ச் 21ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேற்கொண்டு நியூசிலாந்து டி20 தொடரில் பங்கேற்கும் 14 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்திருந்தது.
இதில் தஹ்லியா மெக்ராத் தலைமையிலான இந்த அணியில் சில முக்கிய மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. அதில் மிக முக்கியாமானதாக அந்த அணியின் நட்சத்திர வீராங்கனை அலீசா ஹீலி தனது காயத்தில் இருந்து குணமடையாத காரணத்தால் இத்தொடரில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அறிமுக வீராங்கனை நிக்கோல் ஃபால்டம் ஆஸ்திரேலிய டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.