Kane Williamson Test XI: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை உள்ளடக்கி 21ஆம் நூற்றாண்டின் ஆல் டைம் சிறந்த டெஸ்ட் லெவனை நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் தேர்ந்தெடுத்துள்ளார்.
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரராகவும் இருப்பவர் கேன் வில்லியம்சன். இவர் இதுவரையிலும் நியூசிலாந்து அணிக்காக 105 டெஸ்ட் போட்டிகளில் 186 இன்னிங்ஸ்களில் 9276 ரன்கள் எடுத்துள்ளார், அதில் அவர் 33 சதங்கள் மற்றும் 37 அரைசதங்களையும் அடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கேன் வில்லியம்சன் 21ஆம் நூற்றாண்டில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை உள்ளடக்கிய ஆல்டைம் சிறந்த லெவனைத் தேர்வு செய்துள்ளார்.
அவர் தனது அணியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 4 வீரர்கள், இந்தியாவைச் சேர்ந்த 3 வீரர்கள், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 2 பேர், இலங்கை மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த தலா ஒருவர் என இந்த அணியில் சேர்த்துள்ளார். அதேசமயம் அவர் தனது அணியில் எந்தவொரு நியூசிலாந்து வீரருக்கும் வாய்ப்பு வழங்கவில்லை. அவரது அணியின் தொடக்க வீரர்களாக இந்தியாவின் விரேந்திர சேவாக் மற்றும் அஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடனை தேர்தெடுத்துள்ளார்.