
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 4ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஐடன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய ஐடன் மார்க்ரம் 15 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான மிட்செல் மார்ஷ் 21 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேற்கொண்டு அவருடன் இணைந்துள்ள நிக்கோலஸ் பூரனும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
அந்தவகையில் இந்த போட்டியில் நிக்கோலஸ் பூரன் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தியதுடன் தனித்துவ சாதனை பட்டியலிலும் இணைந்துள்ளார். அந்தவகையில் நிக்கோலஸ் பூரன் இன்றைய போட்டியில் இரண்டு சிக்சர்களை அடித்த நிலையில் டி20 கிரிக்கெட்டில் தனது 600ஆவது சீக்ஸரை பூர்த்தி செய்துள்ளார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 600 சிக்ஸர்களை விளாசிய நான்காவது வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.